சென்னை: இந்தியன்-2 படத்தின் முதல் பாடல் இப்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள “இந்தியன் 2” படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடலை படக்குழு வெளியிட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, ஸ்ருதிகா சமுத்திரலாவுடன் இணைந்து பாடியுள்ளார். தமிழ் உட்பட 3 மொழிகளில் வெளியான இந்த முதல் பாடலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தற்போதைய காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும், தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில், இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளது. […]