நடிகை கஸ்தூரி ட்வீட்டரில் டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்று எண்ணினேன் என்று ட்வீட் செய்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று […]
நாளை முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் . 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில், தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை காட்டிலும், குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று, தமிழகத்தில் 64 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டது. 60 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் 1885 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1020 […]
நாங்குநேரி தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.இதன் பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் கூறுகையில், இந்த தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை .முதலமைச்சர் பழனிசாமி வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார். மேலும் காங்கிரஸ் பணபலம் படைத்த வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது . அதிமுக வேட்பாளர் சாதாரணமானவர் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை, தற்போது வரை 1500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாதபடி 5200 டாஸ்மாக் கடைகளிலும், விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் […]
வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக அமைச்சர் தங்கமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசுகையில், வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வே திமுக செய்த பொய் பிரச்சாரத்தை நம்பி பொது மக்கள் ஏமாந்து விட்டனர்.தற்போது உண்மை தெரிந்து அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளது என்று தெரிவித்தார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட தற்போதைய முதல்வர் மேலானவர் என்றும், அவர் சாதாரணமாக இருப்பதை கண்டு யாரும் எளிதாய் நினைக்க வேண்டாம் என்று மின்சாரத்துறை தங்கமணி தெரிவித்துள்ளார். சட்ட சபையில் மின்சாரத்துறை மானிய கோரிக்கையின் பொது இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உயர் மின் கோபுரம் கீழ் நின்றால் உடலில் மின்சாரம் பாயும் என்று கூறி பொய் பிரச்சாரம் செய்ததாக குறிப்பிட்டு பேசிய அமைச்சர், அவர் நின்றது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட […]
சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மீதான மானிய விவாதம் நடைப் பெற்றது. அப்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் கஜா மற்றும் ஒக்கி புயலின் போது மின் ஊழியர்கள் மிக சிறப்பாக பணியாற்றினார் அவர்களுக்கு எனது நன்றி என கூறினார். பின்னர் தொடர்ந்து பேசிய அன்பில் மகேஷ் , மின்துறை பற்றிய விவாதத்தை நான் இன்று பேச இருந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் என் கனவில் மின்துறை அமைச்சர் தங்கமணி தான் […]