அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பி.எச்.பாண்டியன் நேற்று சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், சட்ட ஆலோசகர் எனவும் பல பதவிகளில் முக்கிய பங்காற்றியவர் பி.எச்.பாண்டியன். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வருத்தத்தை இரங்கல் தெரிவித்தனர். இவரது இறப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது இரங்கலை […]
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பி.எச்.பாண்டியன் உடலநலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார் . பி. எச். பாண்டியன் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அதிமுக சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1980 முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார். பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தலைவராகப் […]