திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல். இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் உள்ள பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்கூடத்தில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், கடந்த […]
தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் என ரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஸ்ரீபெரம்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் […]