தமிழக சுகாதாரத்துறை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், பல மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் கூடிய ஆக்சிஜன் இடம் இல்லாததால் பல நோயாளிகள் படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் எங்கு கிடைக்கும் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை […]
கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 12,370 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள். பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்அலை வந்த பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 138 மருத்துவமனைகளில் ரூ.282.51 கோடி மதிப்பில் 27,806 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தும் […]