மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நள் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் டெல்லியிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுவதால், அங்கு தீவிரமான ஊரடங்கும் அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை சற்றே அங்கு குறைந்திருந்தாலும், டெல்லியில் பல நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை […]
மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் மூன்று கொரோனா நோயாளிகளும்,கே.எம்.சி மருத்துவமனையில் நான்கு கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசத்தில்,கொரோனா தொற்று பரவலானது அதிக அளவில் இருந்து வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.ஆனால்,தங்கள் மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லவே இல்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பலமுறை மறுத்து வருகிறார். இந்நிலையில்,உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள இரண்டு தனியார் […]
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழப்பு. கொரோனா வைரஸின் 2-வது அலை காரணமாக கொரோனா பாதிப்பு வேகமாக வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தேவையான ஆக்ஸிஜனை வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில், டெல்லி ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 20 நோயாளிகள் இறந்ததாக டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கையிருப்பில் உள்ள […]
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வசாய் தாலுகாவில் உள்ள நால்லசோப்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டினர். நால்லசோப்ரா மருத்துவமனை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். வசாயில் 7,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் […]