செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கால் போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் போக்குவரத்து பல கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை […]