புதன்கிழமை மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தம்பால்னு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் கூப்பும் நகருக்கு வருடாந்திர ஆய்வுச் சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது,டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. மணிப்பூர் மருத்துவமனையில் காயமடைந்த மாணவர்களைச் சந்தித்த முதல்வர் என் பிரேன் சிங், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.