ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. சென்னை, தலைமைச் செயலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர், தமிழகம் முழுவதும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உள்பட 16,888 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நக்கரங்களில் இருந்து பொதுமக்கள் வசதிக்காக […]
ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை. மதுரையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் விதிகளை பின்பற்ற கோரி ஜாகிர் உசேன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் பொதுமக்களிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆட்டோ, டாக்சியில் கட்டணம் மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குற்றமாக […]