இந்தியா முழுமைக்கும் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற சூழலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் ஆகிய மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தற்போது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் முக கவசங்களை அணிந்து தரையில் அமர்ந்தபடி, கைகளில் வாசகங்கள் எழுதிய அட்டைகளை […]