மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்றான ஓடிஸ் புயல் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி மணிக்கு 230 கி.மீ வேகத்தில் அதன் கரையை தாக்கியது. பலத்த காற்று மற்றும் மழை ஆகியவற்றால் அகாபுல்கோ பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் என ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. ஓடிஸ் கடற்கரையைத் தாக்கிய […]