எல் முருகனுக்கு பேச்சுரிமை உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் என்று அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அரியலூரில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றும் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய […]
சசிகலா வரட்டும் அப்பறம் பார்க்கலாம் என நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார். அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் புதிய கல்விக்கொள்கை குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு அவர், “முதல்வர் பழனிச்சாமி கல்விக்கொள்கை குறித்து ஆராய இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாகவும், அவர்களின் […]
அமைச்சர் ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி மரணமடைந்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் . கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கலைச்செல்விக்கு நேற்று திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனையடுத்து அவரது உடல் சொந்த […]
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது. மேலும் ரஜினி,கமல் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில் ,சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நாகை மாவட்டத்தை பிரித்து, மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.