மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று மதியம் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமாகிய ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார். கடந்த ஜூலை மாதம் மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்கள், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் பொழுது, தலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]