ஒசாமா பின்லேடன் தனது வளர்ப்பு நாய்களை ரசாயன ஆயுத சோதனைக்காக பயன்படுத்தினார் என பின்லேடனின் மகன் கூறியுள்ளார். உலக நாடுகளை அதிர வைத்த பயங்கரவாதி என்றால் அது அல்கொய்தா தலைவராக இருந்த மறைந்த ஒசாமா பின்லேடன் தான். அதுவும் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக அவன் இருந்தான் என்றே கூற வேண்டும். பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்க ராணுவம் கடந்த 2011 மே மாதம் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தவனை சுட்டு கொன்றது. பின்லேடன் மகன்களின் ஒருவரான உமர் பின்லேடன் அண்மையில் […]
உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி,நேற்று முன்தினம் வீடியோவில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி அல்-கொய்தா பயங்கரவாதிகள், இரட்டை கோபுரத்தின் மீதும்,அமெரிக்க ராணுவ தலை மையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தியதில், சுமார் 3000 பேர் வரை உயிரிழந்தனர். இதனையடுத்து,இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் […]
உகாண்டாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் சொத்தாக 75 வயது ராட்சத முதலை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உகாண்டா நாட்டில் இருக்கும் விக்டோரியா ஏரியில் 16 அடி நீளமுள்ள ராட்சத முதலை இருந்து வந்தது. மேலும் இந்த முதலை 1991 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அங்கிருக்கும் லூகானா கிராமத்தை சேர்ந்த மக்களை கொன்று தின்றுள்ளது. இந்த ராட்சத முதலைக்கு 80 மக்கள் பலியாகியுள்ளனர். அதனால் இந்த முதலையை அங்கு வசிக்கும் மக்கள் ஒசாமா […]
அல் கொய்தா தீவிரவாத அமைப்பு தலைவரான பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எத்தனை உயிர்களை தியாகம் செய்துள்ளது. இருந்தும் உலக நாடுகளின் பார்வையில் பாகிஸ்தான் எவ்வாறு விமர்சிக்கப்பட்டது என தனது உரையினை நிகழ்த்தினார். அதில் அவர் மேலும் கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரில் பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு […]
பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட தினம் மே 2-ஆம் தேதி ஆகும். ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் பிறந்தது மார்ச் 10, 1957-ஆம் ஆண்டு ஆகும்.பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்.செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார். இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். […]
இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு […]