ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் மாடல்கள் கொண்ட போன் பயன்படுத்துபவர்களுக்கு இன்று முதல் வாட்ஸ் அப் இயங்காது. இந்த 2021 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வாட்ஸப் நிறுவனம் முன்னமே தெரிவித்தது போல இந்த ஆண்டின் முடிவில் வாட்ஸப்பில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸப் இனி வேலை செய்யாது எனும் அறிவிப்பை அண்மையில் வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டது. […]