போலு : துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலு மாகாணத்தின் கொரோக்லு மலைப்பகுதியில் உள்ள கர்தல்காயாவில் உள்ள ஸ்கை ஹோட்டலில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. நேற்று அதிகாலை 3:27 மணிக்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கியிருந்தோர் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் அதிகாலை 4:15 மணிக்கு […]