TN Govt: தமிழகத்தில் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடுத்த சில நாட்கள் தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய […]