அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த கேரளாவை சேர்ந்த நபருக்கு ஒரிஜினலாக பாஸ்போர் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா எனும் கிராமத்தை சேர்ந்த மிதுன் பாபு என்பவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் பாஸ்போட் கவர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1 ஆம் தேதியும் மிதுனுக்கு பார்சல் வந்துள்ளது. அதில் அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் தான் இருக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால் […]