கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை சேர்ந்தவர், கனிமொழி. இவர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர், கடந்த 27 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிரூக்கும்போது நேர்ந்த விபத்தில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து, அவரில் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் பெற்றோர் முன்வந்துள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் இதயம், கண்கள், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அகற்றப்பட்டு, சென்னை, திருச்சி. மதுரை உள்ளிட்ட மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. […]