அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரனை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரனை நியமித்துள்ளார் ஓபிஎஸ். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி இராமசந்திரன் (கழக அமைப்பு செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் […]