டெல்லி: உடல் உறுப்பு விற்பனையில் ஈடுபட்டதாக மருத்துவர் உட்பட 7 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளை, அவர்களின் உறவினர்கள் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தேவைப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிப்பது சமீப காலமாக மருத்துவ உலகில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உடல் உறுப்புகளை விற்பனை நோக்கத்தில் தானம் செய்வது சட்டப்படி பெரும் குற்றமாகும். இதனை தலைநகர் டெல்லியில் ஒரு கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று […]