நடப்பாண்டு நெல் கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக முதலவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலமைச்சரின் உத்தரவுபடி தமிழகத்தில் கடந்த கொள்முதல் பருவமான 2019-2020ம் ஆண்டுக்கான 2 ஆயிரத்து 135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதில் சுமார் 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையாக ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 130 கோடி ஆனது விவசாயிகளின் வங்கி கணக்கில் […]