ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தஞ்சை மாவட்டtத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட காந்தி (வயது 55) திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிர்ழந்துள்ளார். கொரோனாத் தொற்றுக்கு அரசியல் பிரமுகர் காந்தியின் மரணம் ஒரத்தநாடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பொதுமக்கள் மட்டும் அல்லாமல் களத்தில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்கள் ,அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ எம்.ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.