திருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக ஆட்சியர் சிவராசு பேட்டி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகளைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருச்சியில் மொத்தம் 51 பேர் […]