கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோ ட்ரோன் காட்சிகள் மூலம் ரஷ்யாவில் உள்ள மேற்கு சைபீரியாவின் லியோவிகா அருகே ஒரு ஆரஞ்சு நிறத்தில் இருந்த நிலத்தை காட்டியது. இதையெடுத்து, பின்னர் நடத்திய விசாரணையில் அது நிலம் அல்ல ஆறு என்பது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத செப்பு-சல்பைட் சுரங்கத்தில் உள்ள கழிவுகள் அங்குள்ள குளங்களில் சேமிக்கப்பட்டிருந்தன, ஆனால், ரஷ்யாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த குளங்களில் இருந்த கழிவுகள் நிரம்பி வழிகின்றன. […]