எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் என தமிழிசை சவுந்தராஜன் இரங்கல். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், அதிமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்றும், செய்தி வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி ஜெம் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் (வயது 63) இன்று காலை காலமானார். எதிர்க்கட்சி துணை தலைவர் ஒபிஎஸ்-யின் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி உயிரிழந்தார். கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.