அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூன்றாவது தம்பி பாலமுருகன் காலமானார், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பாலமுருகன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 55.பெரியகுளம் தென்கரையிலுள்ள இல்லத்தில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.