மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறும் எதிர்கட்சிகளின் அறிக்கைகள் தவறானது என்று மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் தனது உரையின் போது குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தேனி மாவட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். அவர் பேசும்போது, “சுமார் 10 ஆண்டுகளாக எனது தொகுதியில் நிலுவையிலிருந்த பணிகளை விரைந்து முடிக்க ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ததற்காக நமது பாரத பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. […]
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு, அக்.16-ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கவுள்ளது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தேனீ தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இவர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வெற்றி பெற்றுள்ளதாக தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் […]