நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து சில வருடங்கள் இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததுள்ளார். இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்கு காரணம், படத்திற்கு அழைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாய்ப்பிற்காக படுக்கைக்கு சென்றால் வாழ்க்கையை இழக்க வேண்டியது தான் என கூறியுள்ளார்.