துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக இன்று காலை 10 மணி முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சொத்து வரி உயர்வு, முதல்வரின் வெளிநாட்டு பயணம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் தற்போதும் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்ப ஆலோசனை கூட்டத்தில் முடிவு. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில் சரத்பவார், டிஆர் பாலு, சஞ்சய் ராவத், மல்லிகார்ஜுன, கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 12 எம்.பி.க்கள் சஸ்பென்ட், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 12 எம்.பி.க்கள் சஸ்பென்ட் விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை […]
அரசியலமைப்பை மத்திய அரசு அவமதிப்பதாகக் கூறி அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் தொடங்கப்பட்டது. அதன்படி,ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26, “இந்திய […]
கடைசி வார நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 15 ஆவது நாளாக இன்று முடங்கியுள்ளது. கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மழைக்கால கூட்டத்தொடர் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மீதமுள்ள ஐந்து […]
மாநிலங்களவையில் ஆவணங்களை கிழித்து எறிந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.பின்னர்,மீண்டும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில்,தற்போது மாநிலங்களவையில் ஆவணங்களை கிழித்து எதிர்க்கட்சிகள் கடும் […]
கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பது மக்கள் நலனுக்காக தான் எனவும், ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்த கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை அரசுக்கு எதிராகத் திருப்பிவிட இதை ஒரு களமாக பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]