காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் பொது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரின் இறுதி அஞ்சலியில் தெண்மண்டல ஐஜி முருகன், தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, […]