சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞரை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் நியமனமிக்கப் பட்டுள்ளார்.இவர் ஜூலை 1 ம் தேதி சங்கரநாராயணன் பதவியேற்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் இதுவரை மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.