பெங்களூருவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயதான பெண் ஒருவர் ஒரு அரிதான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். இவர் ஒரு வனவிலங்கு பாதுகாவலர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு வார காலமாக வலி மற்றும் உச்சந்தலையில் ஒரு விசித்திரமான ஊர்ந்து செல்லும் உணர்வு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், பெங்களூரில் உள்ள ட்ரைலைஃப் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்றார் மோகன் யாதவ்..! அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண்ணின் உச்சந்தலையில், லார்வாக்கள் […]
வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின் கியூபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பின் மருத்துவர்கள் அவருக்கு சி.டி ஸ்கேன் செய்ததில், அந்த நபர் டென்ஷன் நியூமோசெபாலஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த பரிசோதனைகள் மனிதனின் அறிகுறிகளின் அசாதாரண நிலையை வெளிப்படுத்தியது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்! இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரு ஜோடி […]
பீகாரில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள். பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், வலியில் துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்ததாக அப்பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட […]
பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது கருப்பையில் இருந்து 236 நார்த்திசுக்கட்டிகளை அகற்றியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது வாழ்க்கையில், அதிர்ச்சிகரமான மற்றும் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை மூலம் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரித்திகா சர்மா. இவருக்கு வயது 34. இவர் பெங்களூரில் உள்ள சக்ரா வேர்ல்டு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றை […]
சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்து குண்டு அகற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இந்த பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு […]
டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது உள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை […]
கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற தொலைபேசியை விழுங்கியுள்ளார். கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற தொலைபேசியை விழுங்கியுள்ளார். இவர் தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிலையில், தலைநகர் பிரிஸ்டினாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் ஸ்கேன் மற்றும் சோதனைகளுக்கு […]
குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலம் விட்ட ஒலிம்பிக் வீராங்கனை. போலந்து ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா ஆண்ட்ரேஜிக், 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஆண்ட்ரெஜ்சிக் 2 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் பதக்கத்தை இழந்தார். அவர் 2017 இல் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டார் மற்றும் 2018 இல் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். குணமடைந்த பிறகு, இந்த மாத தொடக்கத்தில் டோக்கியோவில் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார். இந்நிலையில், இவர் 8 மாத குழந்தையான துருவ மிலோசெக்கின் […]
அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பிரசவம் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று இயற்கையான முறையில் பிரசவம், மற்றொன்று அறுவை சிகிச்சை முறையில் பிரசவம். ஆனால் தற்போது பல பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட தேதியில், விருப்பப்பட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிசேரியன் முறையை மேற்கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான ஓன்று. இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறுகையில், […]
ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு கூடுதலாக இருந்த மூன்றாவது காலை நீக்கிய மருத்துவர்கள். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அக்குழந்தைக்கு சாதாரணமாக உள்ள இரண்டு கால்களை தவிர்த்து, மேலும் ஒரு கூடுதல் கால் பின்புறத்தில் இருந்துள்ளது. இது முக்காலி சிதைவு என்று கூறப்படுகிறது. இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தாலும், காலில் சக்தி குறைவாக தான் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், மார்ச் 30-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, இன்று இவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து, இராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆனால் அவர் மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், […]
இதயத்துடிப்பு நின்று 45 நிமிடம் கழித்து உயிர் பிழைத்த அமெரிக்காவினை சேர்ந்த ஹைக்கர். அமெரிக்காவில் உள்ள வுடின்வில்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் தான் 45 வயதுடைய மைக்கேல் நாபின்ஸ்கி. இவர் மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் நடப்பதை பழக்கமாக கொண்டவர். இந்நிலையில் அண்மையில் இவர் வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னர் தேசிய பூங்காவில் உள்ள மலைப்பகுதிக்கு நடைபயணம் சென்ற இவர் மீது விமானம் ஏறியதால் படுகாயமடைந்துள்ளார். காணவில்லை என இவர் தேடப்பட்டாலும் ஒரே நாளில் இவரை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு […]
5 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 123 காந்தாமணிகள். சீனாவில், 12 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இருவரும் டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மூழ்கி போன அந்த சிறுவன், தான் விளையாட்டு பொம்மையில் உள்ள காந்தமணிகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளான். இதனையடுத்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம், விளையாட்டு பொம்மையில் இருந்த பந்தை தான் விழுங்கியதாக அவர்களிடம் கூறியுள்ளான். […]
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லா குட்டி. அமெரிக்காவில், போஸ்டனில் உள்ள பிராங்க்ளின் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும், கிகி என்ற 39 வயதான கொரில்லா ஆண்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்த கொரில்லாவுக்கு, குழந்தை பிறப்புக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பதாகவே, சிரமம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலமாகவே குட்டியை வெளியே எடுத்துள்ளனர். இந்நிலையில், பொதுவாகவே கொரில்லா குட்டிகள் 3-5 பவுண்டுகள் மட்டுமே எடை இருக்கும். ஆனால், இந்த குட்டி 6 பவுண்டுகள் எடை இருந்துள்ளது. அதாவது, 2 கிலோ […]
இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை-பெங்களூர் இடையே குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு அதிவேக ரயில் இன்று முதல் தினமும் காலை 7.25 மணியளவில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே அதிவேக சிறப்பு ரயில் இன்று முற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படுகிறது. கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே வாரத்துக்கு 6 நாட்கள் என அக.,23ந்தேதி முதல் ஏசி வசதி கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவலர்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் 2 வயது மகள் கவிஷ்கா. இவர் உடல் நலக்குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்த சிறுமிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில், அதற்கு 5 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, செய்தியறிந்த […]
இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பாலும், மற்றவர்களின் மீது காட்டும் அன்பாலும், இவர் பலர் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் சனம் செட்டியை காதலித்து வருகிறார். இந்நிலையில், சனம் செட்டி, பிக்பாஸ் தொடர்பான பதிவுகளை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டதற்கு, பிக்பாஸ் இது அழகு இல்லை என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சனம் […]