புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். டெல்லியில் மறுவடிவமைக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா கேட் முதல் குடியரசு தலைவர் மளிகை வரை புராணமைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. சென்ட்ரல் விஸ்டா திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது மக்கள் […]
கேரள மாநிலத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அங்கு நிபா வைரஸ் தொற்றும் பரவியுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மாநில உயர்கல்வித்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, மாநிலத்தில் கல்லூரிகளை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த […]
1,6,9 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல […]
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்றும் தற்போதைய சூழலில் மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் உள்ளது, பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே, புதிய தேதிகள் அறிவிக்கப்படும் […]
கடந்த ஜனவரி மாதம் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் திருச்சிக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஓட்டுநரையும் , நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தி உள்ளார்.இதைத்தொடர்ந்து அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் […]
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வைகை பூர்வீக பாசனத்திற்காக வைகை அணை இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 184 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற உள்ளன. இதன்மூலம், இரண்டாம் போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
புதிய நீதிமன்ற கட்டிடத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி திறந்து வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக சுமார் 19 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் , நீதியரசர்களுக்கான குடியிருப்பு, குடும்ப நீதிமன்றம், கூடுதல் மகளிர்கள் நீதிமன்றம் என பலவகையான புதிய கட்டிடங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி திறந்து வைத்துள்ளார். இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர்.