நாளை முதல் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்க சுற்றுலாத் தலங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டன. கடந்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அந்தவகையில் இன்று முதல் பல இடங்களில் சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை முதல் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தென்காசி […]
வரும் 7ம் தேதி தொடங்கவுள்ள மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு சற்றுமுன் தொடக்கம். தமிழக முதல்வர் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுகிறது என்று அறிவித்தார். இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது, இதில், குறிப்பாக மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் […]
கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக வழிப்பாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவிலை ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலில் தரிசனத்திற்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு கோவிலுக்கான வலைத்தளமான ‘spst. in’ மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய […]
புதுச்சேரியில் இன்று முதல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில அரசுகளே சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்றும் […]
14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும். நாடு முழுவதும் நான்காவது கட்ட பொதுமுடக்கம் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகின்ற 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு […]
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், பல பிரச்சனைகளை தாண்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பதான் திறக்கப்பட்டது. அதுவும், கிழமைக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் மதுபானங்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மதுபான பிரியர்கள் மதுக்கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, மது வாங்கி செல்கின்றனர். மேலும் காலை 10 மணி முதல் மாலை 7 வரை […]
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழக்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திறக்கப்பட்டது. அதுவும், கிழமைக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் மதுபானங்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மதுபான பிரியர்கள் மதுக்கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து, மது வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தை தோடர்ந்து புதுச்சேரியில் மதுகக்கடைகளை நாளை முதல் திறக்கலாம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாளை […]
மேட்டூர் அணையில் குருவை பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணையில் கடந்த 2011 -ம் ஆண்டு குறுவை பாசனத்துக்காக ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு, மேட்டூர் அணையில் போதிய நீர் வரத்து இல்லாததால் 8 ஆண்டுகளாக குறுவை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன்பின் இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. […]
மேட்டூர் அணையில் இருந்து 8 வருடங்களுக்கு பிறகு ஜூன் 12 ஆம் தேதி குறுவை பாசனத்துக்காக திறக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணையில் கடந்த 2011 -ம் ஆண்டு குறுவை பாசனத்துக்காக ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு, மேட்டூர் அணையில் போதிய நீர் வரத்து இல்லாததால் 8 ஆண்டுகளாக குறுவை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன்பின் இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. […]
தமிழத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 47 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த 3 ஆம் கட்ட ஊரடங்கில் சிவப்பு மண்டலத்தை தவிர மற்ற ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு செய்யப்பட்டது. பின்னர் இந்த ஊரடங்கில் 34 வகையான கடைகள் திறக்கலாம் என்று […]
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் இந்த ஸ்டேடியத்தில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வருகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத், செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி பதவியேற்றனர். திறக்கப்படாமல் இருக்கும் 3 கேலரிகள் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிடம் தெரிவித்திருந்தனர். இந்தியாவின் பழமையான மைதானங்களில் ஒன்று தான் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம். மாநில அரசுக்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தில் […]
திருமூர்த்தி அணையில் இருந்து, வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருமூர்த்தி அணையில் இருந்து, பாலாறு படுகை மூன்றாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கக் கோரி, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல், மொத்தம் 9 ஆயிரத்து 500 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், கோவை, திருப்பூர் […]
அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்தது முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இது அமெரிக்க ஓப்பன் டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், […]
தஞ்சாவூர்; காந்திஜி சாலையில் மணிக்கூண்டு எதிரில் இபிகே தங்கமாளிகை திறப்பு விழா நடந்தது. இபிகே தங்கமாளிகை நிறுவனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். வர்த்தக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், இன்ஜினியர்கள், டாக்டர்கள், தஞ்சை காசுக்கடை வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த தங்கமாளிகை திறப்பு விழாவில் பங்கேற்றனர். இபிகே தங்கமாளிகை உரிமையாளர்கள் மனோஜ் பிரபாகர், சிலம்பரசன் அனைவருக்கும் நன்றி கூறினர். திறப்பு விழா சலுகையாக 916 ஹால்மார்க் தங்க நகைகளுக்கு 3 […]