ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ட்வீட். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் மசோதா இயற்றப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் ஜூன் மாதம் சமர்ப்பித்தது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்.26-ம் தேதி […]
முழு மற்றும் பகுதி நேர விரைவுரையாளர்களை நீக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என ஓபிஎஸ் அறிக்கை. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிக்கை என்றால் அது தனிப்பட்ட கழகத்தின் விருப்பமாக மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகவே அமையும் என்று நீட்டி முழக்கி 127 பக்க தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டது. அதில் மிக முக்கியமான வாக்குறுதிகளை மட்டும் தலைப்புச் செய்திகளாக வாசிக்கிறேன் என்று சொல்லி பல வாக்குறுதிகளை அளித்தார் திமுக தலைவர். இந்த முக்கியமான வாக்குறுதிகளில் […]
அதிமுகவின் அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரனை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து முன்னாள் முதலான்ச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி, அதிமுக அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் ஆகியோரை நியமனம் செய்துள்ளார். தேர்தல் பிரிவு செயலாளராக சுப்புரத்தினம், மகளிரணி செயலாளராக ராஜலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று, விழுப்புரம், கடலூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர்களையும் […]
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார். சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் பிறந்தநாநாளையொட்டி இன்று அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அந்தவகையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார். […]
அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமசந்திரன் நீக்கம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. அதிமுகவின் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரனை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் சற்று முன் அறிவித்திருந்தார். ஓபிஎஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமசந்திரன் (கழக அமைப்பு செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈபிஎஸ் எதிரான கருத்துக்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்திருந்தார் ஓபிஎஸ். […]
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரனை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரனை நியமித்துள்ளார் ஓபிஎஸ். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி இராமசந்திரன் (கழக அமைப்பு செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் […]
அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம். அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுவும், காணாமல் போன 113 ஆவணங்கள் சிபிசிஐடி போலீசார் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்திருந்தது. இதில் குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி […]
தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம் என சசிகலா பேட்டி. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனையை குறித்து கேள்வி எழுப்பலாம், இது உட்கட்சி பிரச்சனை, இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கேட்க வேண்டிய அவசியமில்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு மாறி மாறி டெல்லி சென்று வருகிறார்கள். பிரதமர் மோடி தான் இருவரது பிரச்சனையை தீர்த்து […]
பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் அரசு பேருந்துகளை அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். ஆம்னி பேருந்துகளில் அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. பொதுவாக பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்கள், சனி, ஞாயிறு போன்ற […]
கட்சியில் இருந்து நீக்கியது எப்படி அவதூறாகும்? என புகழேந்திக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி. ஓபிஎஸ், ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுகவின் செய்தி தொடர்பாளர் இருந்த பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து கடந்தாண்டு ஜூன் மாதம் நீக்கி அப்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை மூலம் அறிவித்தனர். […]
அதிமுக தலைமை அலுவலத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களில் ஓபிஎஸ் பேனர்கள் அகற்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. புதிய பேனர்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதிமுக தலைமை அலுவலத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களில் ஓபிஎஸ் பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக உட்கட்சி […]
கட்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கவே அவை ஓபிஎஸ் வாகனத்தில் வைக்கப்பட்டதாக மனுவில் தகவல். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு செப்டம்பர் 19-க்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் […]
அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தபோது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் எவ்வாறு […]
அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தார். அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்லும்போது அவரை வரவேற்க தொண்டர்கள் கூடும் வாய்ப்பு உள்ளது. எனவே, இடையுறு இல்லாத வகையில் பாதுகாப்பு தர கோரிக்கை […]
ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைவதை தடுக்க பாதுகாப்பு தேவை. அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமச்சர் சிவி சண்முகம் ஏற்கனவே போலீசில் […]
சசிகலாவுடன் ஓ.பி.எஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சந்திப்பு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டுவில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து சசிகலா பேசியுள்ளார். திருமண விழாவில் நடந்த சந்திப்பில் ஒரத்தநாடு எம்எல்ஏவான வைத்திலிங்கத்துக்கு சாக்லேட்டையும் வழங்கினார் சசிகலா. அதிமுகவில் உட்சட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில், சசிகலா ஒற்றுமை குரல் எழுப்பி வரக்கூடிய சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தொண்டர்களை சந்திப்பதற்கும், கோயில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வில் பங்கேற்பதற்கும் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த […]
ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் எப்படி தொண்டர்கள் ஏற்பார்கள் என அதிமுக அலுவலகம் சென்ற ஈபிஎஸ் பேட்டி. அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 72 நாட்களுக்கு பின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, ஈபிஎஸ்-யுடன் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், வைத்திலிங்கம், எஸ்பி […]
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவிப்பு. தேனி பெரியகுளத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் தெரிவித்துள்ளார். ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், […]
இரு தலைவர்களும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதன் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த […]
தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என ஓபிஎஸ் தரப்பு. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம், […]