சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் பேச்சு. சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய மனோஜ் பாண்டியன், அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் எடப்பாடி பழனிசாமி, அதற்கான மருந்துதான் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடியிடம் உள்ளது டெண்டர் படை, ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளது தொண்டர் படை. ஒத்துவரவில்லை என்றால் எடப்பாடியை ஒழித்துவிட்டு ஒன்றிணைவோம் என மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் […]
பண்ருட்டி ராமச்சந்திரன்மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை. திமுக அரசுக்கு எதிராக ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டம் கட்சி கூட்டம் அல்ல என விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் நடத்தும் கம்பெனியில் இயக்குநர்கள் குழு கூட்டம்தான் நடந்து கொண்டிருக்கிறது. மூத்த அரசியல்வாதியான […]
அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மீது கட்டமான விமர்சனம். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன், அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி […]
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் போட்டி பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு. அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தனியாக செயல்பட தொடங்கியதுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். […]
காலி பணியிடங்களுக்கு ஏற்ப 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை. அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு தாமதிப்பது கண்டனத்துக்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் இரண்டு வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக […]
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜனவரி 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை ஜனவரி 4-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு […]
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ரூ.3000 ரொக்கமாக வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக, கடந்த 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப […]
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றம் நடைபெற்று வந்தாலும், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டே வருகிறது. கடந்த விசாரணையின்போது, அதிமுக பொதுக்குழு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் […]
அதிமுக பொதுக்குழு வழக்கை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இவ்வழக்கு விசாரணையின்போது, […]
சின்னத்திற்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு. அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சின்னத்தை உரிமைகோர ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். சின்னத்திற்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க வேண்டும் என்றும் வார்டு தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் அதிமுகவுக்கு உரிமைகோர பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் வைரமுத்துவின் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வருகின்ற 12ம் தேதிக்கு மீண்டும் […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு செல்லும் என வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இதில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை […]
ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து விலகுவதாக அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் அறிவிப்பு. அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர் எனவும் கூறியுள்ளார். கோவை செல்வராஜ் கூறுகையில், திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், விரைவில் நல்ல முடிவு எடுப்பேன், இதுபோன்று அரசியலை விட்டு விலகமாட்டேன், ஆனால் துரோகிகளோடு […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக டிச.6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவு. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணை நடைபெறாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிச்சயம் டிசம்பர் 6ம் தேதி விசாரணைக்கு […]
வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.75,000 வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களும் இழப்பீட்டினை உயர்த்தி வழங்க திமுக அரசுக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதிகன மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து […]
மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று ஓபிஎஸ் அறிக்கை. அரசுப் பணிகளை தனியார்மயமாக்கி சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் என்ற முறையில் ஐந்தாண்டுகளில் 50 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. […]
திமுக அரசை, மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை. ஆவின் பால் விலையை உயர்த்தியுள்ள மக்க விரோத திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க., ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு மின்சாரக் கட்டணத்தை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்தி ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் அளவுக்கு மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. இதேபோல், சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது […]
தி.மு.க.வை கை கழுவும் நாள் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை. ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அந்த பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசு துறைகள், […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீத உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தல். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி ஜூலை முதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பணியினை மேற்கொள்ளும் […]
சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பதில். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று தமிழக அரசால் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், 2012-ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக […]