கோடநாடு வழக்கில், அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 27ம் தேதி சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து, விசாரணையின் போது, புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடநாடு வழக்கின் விசாரணையை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, கோடநாடு வழக்கு இன்று மீண்டு உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்துவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் உதகை நீதிமன்றத்தில் விசாரணை. கடந்த 2017-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் இருந்த நிலையில், சமீபத்தில் மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் சாயனுக்கு […]