சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை தொடர்பான கூடுதல் விவரத்தை அளிக்கும் வகையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்டாவில் 1ம் தேதி […]
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இதன் காரணமாகவே 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27) நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதனால், நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து இன்று காலை விமானம் மூலம் கோயம்பத்தூர் விமான நிலையம் வந்தடைந்த திரௌபதி, ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்குச் செல்வார் […]
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன, ரயில் பாதையில் கற்பாறைகள் விழுந்தன. தண்டவாளத்தின் குறுக்கே மரங்கள் விழுந்து ரயில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் உதகமண்டலம் மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது, மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆம், சீரமைப்பு பணிகள் முடிந்ததால், நாளை […]
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும் நாளையும் (நவ.6,7) ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, நீலகிரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதில், குறிப்பாக மேட்டுப்பாளையம் – உதகை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 60 அடி உயரத்தில் […]
கோவை : ஊட்டி, குன்னூர் பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. மேலும் , மரங்கள் அங்கங்கே சரிந்து விழுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதவரை குன்னூர் பகுதியில் 10 செமீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக குன்னூர் பகுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கால்வாய் அடைப்பு, நடைபாதை படிக்கட்டுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மலைப்பாதை, ராணுவ பகுதி […]
Kodaikanal : இதுவரையில் கொடைக்கானல் செல்ல சுமார் 54 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியது என்றாலே தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிடும். கட்டுக்கடங்காத வகையில் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாவதை தடுக்க அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்கில் ஓர் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, ஊட்டி கொடைக்கானல் வருவோர் , கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்டது போல, […]
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் , தற்போது ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலாவாசிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. மாணவர்களுக்கு கோடை விருமுறையும் ஆரம்பித்து விட்டதால் மேற்கண்ட சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர். ஊட்டியில் மட்டும் தினசரி சராசரியாக 20 ஆயிரம் வாகனங்கள் […]
E Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் மே 7ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்து வர வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதாலும் மலை பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழலை பாதுகாக்க பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, காந்தி நகர் பகுதியில் லவ்டேல் செல்லும் சாலையில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. “எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” – ஜெயக்குமார் இந்த அடுக்குமாடு குடியிருப்பு சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. சுமார் 15 அடிக்கு மேலான உயரத்தில் தடுப்பு சுவரானது அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அந்த கட்டிடத்திற்கு […]
ஆனிக்கல் காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம். – நீலகிரி மாவட்ட ஆட்சியர். உதகமண்டலம் (ஊட்டி) அருகே ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. அதில், 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவு […]
ஆனிக்கல் ஆற்றில் ஏற்றப்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்களில் 3 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மழை வரத்து காரணமாக உதகமண்டலம் ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அப்போது நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக […]
ஊட்டி ஆனிக்கல் காற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயம். வடகிழக்கு பருவமழை இன்னும் ஓயாத காரணத்தால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் உபரி நீர் வெளியேறும் அளவும் அதிகரித்து வருகிறது. அப்படி உதகமண்டலம் ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அப்போது நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. […]
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தொடக்கம். ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். கோவை மற்றும் உதகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார். இதுபோன்று நேற்றைய தினம் உதகையில் 124-ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், இன்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைக்கிறார். அதில் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் […]
ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் இடையே மண்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையில் பாறாங்கல் உருண்டு விழுந்தது. இதனால் ரயில் பாதை முழுவதும் மூடப்பட்ட நிலையில், பாதையோரத்தில் […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னையிலிருந்து,ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார். தமிழ்நாட்டிற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று வருகை புரிந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,நேற்று சட்டபேரவையில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்நிலையில்,நான்கு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் தனி விமானம் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.மேலும்,ராஜ்பவனில் இருந்து கிண்டி விமான நிலையத்திற்கு செல்லும் அவரை வழியனுப்புவதற்காக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர்,தமிழக டிஜிபி உள்ளிட்டோர்,மூத்த அமைச்சர்கள் ராஜ்பவனுக்கு சென்றனர். சென்னையில் இருந்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளிமாநிலத்தவருக்கு இ-பாஸ் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில், கொரோனா பரவல் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அதிகாரிகளுடன் ஊட்டியில் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், […]
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.447.32 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி அமையவுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம்மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ஊட்டி வனப்பகுதியில் அமையவுள்ள மருத்துவ கல்லூரி க்காக அங்கு 1,838 அயல்நாட்டு மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது. கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை, 90% யூக்கலிப்டஸ் மரங்களே என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. வெட்டப்படும் […]
நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கில், தமிழக அரசு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது. மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு வெளியூர் பயணிகள், இ-பாஸ் பெற்று செல்லலாம் என […]
நீலகிரி மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை தமிழகத்தில் அண்மையில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதில் முக்கியமானதாக மாவட்டங்களுக்கிடையே செல்ல இ-பாஸ் கட்டாயமில்லை என்பதை அறிவித்தார். மாநில அரசு அறிவித்தாலும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட நிலைமையை பொறுத்தே மாநில அரசு உத்தரவுகளை அமல்படுத்தும். அந்த வகையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் […]
ஊட்டி 124-வது மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்து அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், திரைக்கு வர தயாராக இருந்த திரைப்படங்கள், மற்றும் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஊட்டியில் நடைபெறும் மலர்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு கழிப்பதுண்டு. தற்போது ஊரடங்கு உத்தரவால், ஊட்டியில் நடைபெறும் 124-வது மலர் கண்காட்சியில் மக்கள் பங்கு கொள்ள […]