தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைந்த பிறகு, நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளினால் (சூதாட்டம்) பணத்தை இழந்து அதிக கடன்களை வாங்கி பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தின் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது. கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது நிறைவேற்றப்பட்டது. […]
ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் தற்போது ஆனந்தன் என்ற இளைஞன் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற மென்பொருள் பொறியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது […]
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நம்புகிறோம். ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களுக்குள் தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வரும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. பல உயிர்கள் இதுபோன்ற ஆன்லைன் தளங்களால் பறிபோவதால் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 10 நாளில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இன்றைய இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்தில் தான் உலாவி வருகின்றனர். இது தான் அவர்களின் பொழுதுபோக்காகவும் மாறியுள்ளது. அந்த வகையில், இன்று பலரும் ஆன்லைனில் விளையாட்டுகளில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். முதலில் பொழுதுபோக்குக்காக தொடங்கப்படும் இந்த விளையாட்டானது, நாளடைவில் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி விடுகின்றனர். இதற்காக தங்களது பணத்தை இழப்பதோடு, அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், மன உளைச்சலில் […]
ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் சீரழிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வில் வந்த நிலையில், விராட் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் சீரழிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து, இந்த வழக்கில் விசாரணையை […]