முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.Ed படிப்பிற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.edu ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நாளை முதல் […]
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதி ரேண்டம் எண் வழங்க திட்டம். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தாலும், ஆன்லைன் மூலம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்திருந்த நிலையில், […]
நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வு விண்ணப்பத்தை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்று […]
இந்தியா முழுவதும் பல் மருத்துவ படிப்பு முதுநிலைகளுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பெற பதிவிறக்கம் செய்யலாம் என்று கீழ்கண்ட இணையதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnhealth.org மற்றும் http://tnmedicalselection.org மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கடைசியாக மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . மார்ச் 26ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.