சென்னை : கடந்த சில நாட்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாட உணவில் தக்காளி முக்கியத்துவம் வகிக்கிறது. சைவமோ, அசைவமோ என எந்த வகை சமையலிலும் தக்காளி பயன்படுத்தப்படாத நாளே கிடையாது. தற்போது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100-ஐயும் நெருங்கியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகளில் விற்று வருகிறது. தமிழக […]
எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி கடைகள் […]
*ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது. *புதுச்சேரியிலுள்ள சந்தையில் வெங்காய திருடிய நபரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் தற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது. அந்த அளவிற்கு […]
இன்று முதல் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மழை நீடித்து வந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்தது.இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இன்று முதல் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் அறிவித்துள்ளனர்.வெளிச்சந்தை விலையை விட குறைவாக கிலோ ரூ.30 மற்றும் […]
வெங்காயம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, விலை அதிகமாக இருந்த நிலையில், தற்போது வெங்காய விலை சற்று குறைந்துள்ளது. வெங்காயம் வரத்து அதிகரிப்பால், சற்று குறைவான விலையில் விற்கப்படுகிறது. மொத்த விலையில் பெரிய வெங்காயம் ரூ.50க்கும், சின்ன வெங்காயம் ரூ.60க்கும் விற்கப்படுகிறது. சில்லறை விலையில், ரூ.65-60 வரை விற்கப்படுகிறது. மேலும் சின்ன வெங்காயம் ரூ.80 வரை விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகள் ரூ.5-10 வரை கூடுதல் விலையில் விற்படுகிறது.
இந்தியர்களின் சமையலில் வெங்காயத்தின் பயன்பாடு மிகவும் அதிகமாகும். தற்போது வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு விலையேறியதால் சாமானியர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வெங்காயத்தை விளைவிக்கும் பிரதான மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வந்ததால் அங்கு விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்ட்டுள்ளதாம். இதனால் வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைந்து போனது. இதன் எதிரொலியாக சென்ற […]