டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற திட்டம், தேர்தலுக்கான உழைப்பு மற்றும் செலவினங்களை குறைக்க உதவும் என ஆதரவாளர்கள் ஒரு பக்கம் தெரிவிக்கின்றார்கள். மற்றோரு பக்கம் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த திட்டம் செயல்படுத்தபட்டால் இடைத்தேர்தல்களின் அவசியம் குறைவடையும், இதனை செயல்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார்கள். இந்த திட்டத்திற்கான மசோதா […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த காலங்களை போல இந்த கூட்டத்தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு, முக்கிய சட்டமசோதா நிறைவேற்றம் என்றில்லாமல் இறுதிவாரமான இந்த வாரம், பாஜக எம்பிக்கள் போராட்டம் போன்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. கடந்த கூட்டத்தொடர் போலவே, இந்த கூட்டத்தொடரிலும் அதானி குறித்தும், மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் […]
சென்னை : ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதனையடுத்து, மக்களவையில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்,மசோதா நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு விவாதத்திற்காக அனுப்பப்படும் எனவும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் விவாதம் நடத்தி அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சட்டமசோதா தாக்கல் செய்வதற்கு முன்பிலிருந்தே […]
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பொருட்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் அதிகம் பேர் ஆதரவாக வாக்களித்திருந்தாலும் அதிகமானோர் எதிர்ப்பு வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் […]
டெல்லி : நாடே எதிர்நோக்கிய முக்கிய மசோதா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மத்திய அரசு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கோரும் இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா மூலம், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறும் சூழல் […]
டெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் இன்று அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரும்பான்மை இல்லாத பாஜக அரசு எப்படி இந்த மசோதாவை அறிமுகம் செய்ய முடியும் என திமுகவும், தனிநபர் விருப்பத்திற்காகக் கொண்டுவரப்படுவதாக திரிணாமுல் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ […]
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 அன்று தொடங்கியது, வரும் டிசம்பர் 20-ம் தேதி நிறைவடைகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டத்தொடர் நிறைவடையும் இந்த சூழலில், சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துவிட்டு, அது தொடர்பாக பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பையும் […]
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 அன்று தொடங்கி டிசம்பர் 20 அன்று நிறைவடைகிறது. இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைபடி, மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை டிச.12இல் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ‘ஒரே நாடு […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் கூட்டத்தொடர் நிறைவடையும் இந்த சூழலில், சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போல, நேற்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் மிக முக்கிய மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று அல்லது நாளை அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என […]