தமிழகம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை, முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சகத்தின் கடுப்பாட்டில் 33,000 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. தற்போது, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், சில மலை கிராமங்களில், 43 நகரும் ரேஷன் கடை எனப்படும் வாகனங்களின் வாயிலாக, கார்டுதாரரின் வீடுகளுக்கு அருகில் சென்று, பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.இதேபோல, தங்கள் தொகுதியிலும், நகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்துமாறு, எம்.எல்.ஏ.,க்கள் பலர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். […]