Tag: #OmniBus

செங்கல்பட்டு சாலை விபத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை : செங்கல்பட்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர் கிராமத்தில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த  4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 20 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]

#Accident 4 Min Read
mk stalin sad

செங்கல்பட்டில் கோர விபத்து.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.! 4 பேர் பலி.!

சென்னை : மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பழுதாகி நின்றது. இதன் காரணமாக பின்பே வந்த  ஆம்னி பேருந்து ஒன்று லாரி மீது மோதியதால் அதிகாலை  கோர விபத்து ஏற்பட்டது. […]

#Accident 4 Min Read
Chengalpattu Accident

மீண்டும் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள்: வெளியான அறிவிப்பு

மீண்டும் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதனை அடுத்து, […]

#Omni bus associations 5 Min Read

தேவையின்றி பேசுவதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும்.. அமைச்சர் சிவசங்கர்!

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லாததால், கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்றும் அவ்வாறு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தர வேண்டும் எனவும் உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரவு […]

#OmniBus 6 Min Read
sivasankar

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழையாதபடி தடுப்புகள் அமைப்பு

பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை ஆம்னி பேருந்துகள் சங்கம் புறக்கணித்தது. அதாவது கோயம்பேடுக்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கவேண்டும் எனவும் கோயம்பேட்டில் இருந்து இயக்கக் கூடாது எனவும் தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்ததை ஆம்னி பேருந்துகள் சங்கம் எதிர்த்தது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 பார்க்கிங் பே-தான் இருப்பதாக கூறுகின்றனர். 1,000 ஆம்னி பேருந்துகளை இந்த 144 நிறுத்தத்தில் எப்படி நிறுத்துவோம் என கூறிய ஆம்னி […]

#OmniBus 3 Min Read

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது – ஆம்னி நிர்வாகம்!

நாளை முதல் ஆம்னி பேருந்துகளை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இன்றிரவு 7 மணிக்கு மேல் சென்னை நகருக்குள்ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவது இன்றே கடைசி நாள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதனால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். […]

#OmniBus 5 Min Read
omnibus

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது – அன்புமணி

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது என்றும், இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உளளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிவுக்கு வராத ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன? தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், […]

#AnbumaniRamadoss 4 Min Read
Omnibus

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம்..!

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆம்னி பேருந்து சங்கம் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை […]

#Diwali2023 3 Min Read
Omnibus

ஆம்னி பேருந்து வேலைநிறுத்தம் வாபஸ்..! அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்..!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி, 120 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என செய்திகள் வெளியானது. ஆனால், அதன்பின் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 80% பேருந்துகளும் இன்று வழக்கம்போல் இயங்கும். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும், இன்று கட்டாயம் பேருந்துகள் இயங்கும் என்பதை தங்களது பயணிகளுக்கு குறுஞ்செய்தி […]

#Commissioner of Transport 4 Min Read
Omni Bus

தவறு இல்லையென்றால் பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை – சிவசங்கர்

தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.  இந்த தருணத்தை பயன்படுத்தி சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதுண்டு. இந்த நிலையில், பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி, 120 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர். அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்.! தமிழ்நாடு ஆம்னி பேருந்து […]

#Minister Sivasankar 4 Min Read
s. s. sivasankar

அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்.! தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் விடுமுறை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இத்தகைய நேரத்தில் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறி சோதனை நடத்தி, 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாலை 6 மணி […]

#OmniBus 5 Min Read
omni bus

வெளியூர்வாசிகளுக்கு அதிர்ச்சி..! 6 மணிக்கு மேல் ஆம்னி பஸ்கள் ஓடாது.! 

ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக வெளியூரில் வேலை பார்க்கும் குறிப்பாக சென்னை பகுதியில் வேலை பார்க்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. விடுமுறை முடிந்து இன்று ஊர்திரும்ப இருந்த மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக ஆம்னி பஸ்கள் இன்று மலை 6 மணிக்கு மேல் இயங்காது என  ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் […]

#Omni 4 Min Read
Omni Bus

அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் – அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. சென்னை, தலைமைச் செயலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர், தமிழகம் முழுவதும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உள்பட 16,888 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நக்கரங்களில் இருந்து பொதுமக்கள் வசதிக்காக […]

#OmniBus 3 Min Read
Default Image

நிவார் புயல் எதிரொலி: இந்த மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!

நிவார் புயல் தாக்கத்தை சந்திக்கக்கூடிய விழுப்புரம், நாகை, உட்பட 7 மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடும் சூறாவளிப் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு நிவார் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி முதல் விசாகப்பட்டினம் வரை […]

#OmniBus 3 Min Read
Default Image

இன்று முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமுடக்க தளர்வுகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகத்திற்குள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆம்னி பேருந்துகள் ஓடவில்லை.ஆம்னி பேருந்துகள் 174 நாட்களாக ஓடாத நிலையில், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்னி பேருந்துகள் இயங்காமல் இருந்தது. இதனிடையே தமிழகத்தில் […]

#OmniBus 2 Min Read
Default Image

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்!

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள், நாளை முதல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகத்திற்குள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு விரைவு பேருந்துக்குள், மாநிலம் விட்டு மாநிலம் வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் […]

#OmniBus 3 Min Read
Default Image

#Breaking: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்!

தமிழ்நாட்டில் 174 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள், வரும் 16 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளில் அரசு பேருந்துகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், இ-பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆம்னி பேருந்துகள் ஓடவில்லை. இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்துகளை இயக்க அனுமதிக்குமாறு அரசுக்கு பலமுறை […]

#OmniBus 2 Min Read
Default Image