சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய , அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், பண்டிகை காலங்களில் இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீண்டும் திரும்பி வரும் போது இருக்கைகள் நிரம்பாமல் வருவதாகவும், அதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். சாதாரண நாட்களில் வழக்கமான கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்குவதாகவும், இதுவரை அரசு கட்டணம் நிர்ணயிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் அதிக கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை […]