திரிபுராவில் நாளை முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் நாளை முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், விளையாட்டு அரங்குங்கள், பொழுதுபோக்கு பூங்கா ,பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் […]
ஜனவரி 8 முதல் 16 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலங்கானா முதல்வர் அறிவிப்பு. தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மையப்படுத்தி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவை சமாளிக்க […]
ஓமைக்ரான் பரவல் காரணமாக பள்ளிகளை மீண்டும் மூட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு. ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று, உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், கேளிக்கை பூங்காக்கள் மீண்டும் மூடவும் மற்றும் அனைத்து விதமான கொண்டாட்டங்களுக்கு தடை எனவும் அறிவித்துள்ளார். […]
நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்றை தினம் வரை 223 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 104 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு தரப்பில் […]
நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில், நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார். நாட்டில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று, ஜம்மு காஷ்மீர் […]
தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் வந்த 61 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தென் ஆப்ரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது எனவும் இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவைத் தவிர, போட்ஸ்வானா, […]