ஓமைக்ரான் தடுப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓமைக்ரான் தடுப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 11:30 மணியளவில் […]
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் எதுவும் நடைபெற கூடாது என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றானது தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில், இந்தியாவைப் பொறுத்தவரையில் 200-க்கும் மேற்பட்டோர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் தான் அதிகமானோர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவலை […]
முழுமையாக தடுப்பு செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்டா வகை வைரஸ் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த தொற்றால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்து உள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் […]
அமெரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று அதிகமாக பரவுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது தீவிர தாக்குதல் நடத்தி வந்த நிலையில், வல்லரசு நாடான அமெரிக்கா இந்த வைரஸ் பாதிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகிறது. இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா […]
வெளிநாடுகளில் இருந்து இதுவரை இந்தியா வந்தவர்களில் 101 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வரைஸானது, தொடர்ந்து உலகில் அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்தது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்த நிலையில், இந்த வைரஸானது உருமாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன், டெல்டா வகை கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் […]
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வருவதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இரு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த […]
மகாராஷ்டிராவில் புதிதாக மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தான் ஓமைக்ரான் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், மகாராஷ்டிராவில் இதுவரை 20 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
ஓமைக்ரான் பாதிப்பால் இதுவரை எந்த ஒரு நாட்டிலும் உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதல் முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முதலில் சீனாவின் யுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வந்தது .கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொற்று பரவல் பரவி வந்த நிலையில், இந்த தொற்று பலவிதங்களில் உருமாற்றம் அடைந்து வருகிறது,. அந்த வகையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தீவிர தாக்குதல் […]
ஓமைக்ரனால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல்சோர்வு, தலைவலி மட்டுமே உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் தற்போது புதிய வகை ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இதுகுறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்க மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் இந்த வகை வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தற்போதைய சூழலில் ஓமைக்ரானால் பாதிப்பு குறைவாக இருப்பினும், இதன் வீரியம் குறித்து வரும் காலங்களில் தான் தெரிய வரும். ஓமைக்ரனால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல்சோர்வு, […]
சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி. ஓமைக்ரான் கொரோனா தொற்று பல இடங்களில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் […]
ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸை தொடர்ந்து, தற்போது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே இந்தியாவில் 12 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது, ராஜஸ்தான்-9, கர்நாடகா-2, […]
தமிழகத்திற்குள் ஓமைக்ரான் இன்னும் வரவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 11 நாடுகளில் இருந்து மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச விமான நிலையங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த நபர் மருத்துவமனையில் […]
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 மற்றும் 46 வயதான ஆண்கள் இருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். நேற்று இரவு, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 மற்றும் 46 வயதான ஆண்கள் இருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் […]
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடையாது என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவச […]
இது கொரோனா வைரஸின் முடிவு காலமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர் ஹாமிஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் கருத்தரங்கில் பேசிய பிரபல வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல், இந்தியாவில் டெல்டா வகை கொரோனா பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால், பெரும்பாலான இந்தியர்கள் உடலில் எதிர்ப்பாற்றல் உள்ளது. அண்மையில், நடத்தப்பட்ட ஆய்வில் 67% இந்தியர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எதிர்ப்பாற்றல் உள்ளவர்களை ஓமைக்ரான் போன்ற புதிய வகை கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புகள் குறைவு. […]