ஓமைக்ரானை எதிர்த்து போராட பூஸ்டர் டோஸ் போடுவது அவசியம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) நடத்திய […]
ஓமைக்ரான் டெல்டாவை விட வீரியமானது அல்ல என அமெரிக்க விஞ்ஞானி ஆண்டனி ஃபாசி கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரோன் கொரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் புதிது புதிதாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவி வரும் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் டெல்டா வகை கொரோனவை […]
தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 50 ஆயிரம் இடங்களில்,13 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையாய் அதிகரிக்கும் விதமாகவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் வரும் காலங்களில் சனிக்கிழமைகள் தோறும் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை […]