டெல்லி : கடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார். பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், எடைக் குறைப்புக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்த வினேஷ் போகத், நீர்சத்து குறைபாடு காரணமாக நீர்சத்து குறைபாடு காரணமாக , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் [IOA) […]
ஒலிம்பிக்ஸ் 2024 : 33ஆவது ஒலிம்பிக்ஸில் சீனா அணி முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. சனிக்கிழமையன்று Chateauroux-ல் நடந்த பாரீஸ் விளையாட்டுப் போட்டியின்10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவு இறுதிப் போட்டியில், தென்கொரியாவை சீனா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரிய வீரர்கள் வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதன்மூலம், 2024 ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. […]
பாரிஸ் ஒலிம்பிக் 2024 : பிரான்ஸ்சின் தலைநகரமான பாரிஸில் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தொடக்க விழாவானது பாரீசின் புகழ் பெற்ற சென் நதி கரையில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் அனைத்து வீரர்களின் அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பு சென் நதியில் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பான்ட் […]
பாரிஸ் ஒலிம்பிக் 2024 : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளதால் பாரிஸ் மாகாணம் களைகட்டி வருகிறது. உலகம் முழுவதும் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் விளையாட்டு போட்டி தான் ஒலிம்பிக் போட்டிகள், உலக நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இந்த மிகப்பெரிய ஒலிம்பிக் திருவிழாவானாது நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த […]
பாரிஸ் ஒலிம்பிக் 2024: 33-ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா பாரிஸில் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர். 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டைஎன 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரிஸ் நகரைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒலிம்பியாட்டின் தொடக்கத்திலும் கிரேக்கக் கடவுள் ஜீயஸைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் […]